காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு
பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்
பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், வேல்ஸ் நாட்டில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசர உதவிக்குழுவினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுவருவதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நாட்டிலுள்ள Blaenavon மற்றும் Porth போன்ற இடங்களில் பற்றியெரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடிவரும் நிலையில், தங்களுக்கு உதவ ராணுவத்தை அனுப்பவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவியாக சுமார் 100 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் பார்பிக்யூ முறையில் சமைத்தல் போன்ற காரணங்களுக்காக திறந்தவெளிகளில் தீப்பற்றவைக்கவேண்டாம் என்றும் ஆன்டி பர்னாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
திறந்தவெளிகளில் தீப்பற்றவைத்தல் பிறர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்று கூறியுள்ள அவர், ஆகவே, பொதுமக்கள் தயவு செய்து அதைச் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |