சுவிஸ் ஏரியில் மூழ்கி பிரித்தானிய இளைஞர் பலி
British teenager drowns in Swiss lake: பிரித்தானிய இளைஞர் ஒருவர் சுவிஸ் ஏரி ஒன்றில் மூழ்கி பலியானார்.
குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய இளைஞர் ஒருவர், சுவிஸ் ஏரி ஒன்றில் மூழ்கி பலியானார்.
சுவிஸ் ஏரியில் மூழ்கிய பிரித்தானிய இளைஞர்
சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்திலுள்ள Lake Cauma என்னும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள சிறு தீவு ஒன்றிலிருந்து, ஏரியின் கரைக்கு நீந்திச் செல்ல முயன்றுள்ளார் அந்த 17 வயது இளைஞர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார். வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட பலர், நீந்தியும் சிறுபடகுகள் மூலமும் சென்று அவரை கரைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
தற்செயலாக அங்கு வந்திருந்த மருத்துவ உதவிக்குழுவினர் சிலர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க, ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அன்று மாலையே அவர் உயிர் பிரிந்துள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |