பிரித்தானியாவின் ஹீரோ... NHS ஊழியர்களுக்காக பல மில்லியன் நிதி திரட்டிய கேப்டன் Tom Moore மரணம்!
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற இராணுவ வீரரும், கொரோனாவுக்காக உயிரையே பணயம் வைத்து போராடும் மருத்துவ பணியாளர்களுக்காக தன்னுடைய தள்ளாத வயதிலும் நிதி திரட்டிய Tom Moore இன்று உயிரிழந்தார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமான போது, அங்கிருக்கும் என்.எச்.எஸ் ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதில் தீவிரம் காட்டி வந்தனர்.
இதில் ஒரு சில என்.ஹெச்.எஸ் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். இது போன்ற ஒரு சூழ்நிலை இருந்த போது இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற இராணுவ வீரரான கேப்டன் Tom Moore, இந்த என்.ஹெச்.ஊழியர்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நிதி திரட்ட முடிவு செய்தார்.
தன்னுடைய இந்த தள்ளாத வயதிலும், தனக்கு 99 வயது என்பதால், தனக்கு 100 வயது வருவதற்குள் தனது தோட்டத்தை 100 முறை சுற்றிவர முடிவு செய்தார்.
அதுமட்டுமின்றி, தனது இளைய மகள் Hannah உதவியுடன் Just Giving என்று ஒரு கணக்கைத் துவக்கி, மருத்துவப் பணியாளர்களுக்காக நன்கொடை அளிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
தான் இராணுவத்தில் பணியாற்றியபோது வாங்கிய மெடல்கள் மற்றும் தன்னிடமிருந்த கோட் ஒன்றை அணிந்து கொண்டு தனது வாக்கர் உதவியுடன் தனது தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தார்.
அவரது இலக்கு 1,000 பவுண்டாக இருந்தது, ஆனால், அது 50,000 பவுண்டுகள், சில நாட்களில் 100,000 பவுண்டுகள் என இறுதியில் அவர் 32 மில்லியன் டொலர் நிதி திரட்டியதாக கூறப்பட்டது.
அவரின் இந்த செயலைக் கண்ட நாட்டின் பிரதமரான போரிஸ் ஜோன்சன் அவரை பாராட்டினார். நேரில் அழைத்து பேசி வாழ்த்து தெரிவித்தார்.
இப்படி மக்களால் ஹீரோவாக பார்க்கப்பட்ட இவர் தன்னுடைய 100 வயதில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவருடைய மகள்களான ஹன்னா மற்றும் லூசியிடமிருந்து வேதனையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்கள் அன்பான தந்தை Tom Moore-ன் மரணத்தை நாங்கள் அறிவிப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வாழ்க்கையின் கடைசி மணிநேரங்களில் நாங்கள் அவருடன் இருந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகநாங்கள் சிரிப்பையும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டோம்.
எங்கள் தந்தையின் வாழ்க்கையின் கடைசி ஆண்டு குறிப்பிடத்தக்கதாக இல்லை. அவர் புத்துயிர் பெற்றார். எப்போதும் கனவு கண்ட விஷயங்களை அனுபவித்தார்.
அவர் ஒரு குறுகிய காலத்திற்குள் பல இதயங்களில் இருந்தபோதும், அவர் ஒரு நம்பமுடியாத தந்தை மற்றும் தாத்தாவாக இருந்தார், அவர் நம் இதயங்களில் என்றென்றும் உயிரோடு இருப்பார்.
எங்கள் தந்தை கடந்த சில வாரங்கள் மற்றும் அவரது வாழ்க்கையில் என்.ஹெச்.எஸ் மற்றும் கவனிப்பாளர்களிடமிருந்து பெற்ற கவனிப்பு அசாதாரணமானது.
எங்கள் தந்தை கடந்த 12 மாதங்கள் நடந்ததைப் பற்றி அதிகம் பேசினார், மேலும் அவரது அறக்கட்டளையின் வளர்ந்து வரும் மரபுகளை விட்டுச் செல்ல முடிந்ததில் மிகவும் பெருமிதம் கொண்டார்.
இந்த நேரத்தில் நாங்கள் தனியுரிமையை பணிவுடன் கேட்கிறோம், எனவே நாங்கள் ஒரு குடும்பமாக அமைதியாக துக்கப்படுவோம், எங்கள் தந்தையின் அற்புதமான 100 ஆண்டுகளை நினைவில் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், Tom Moore குடும்பத்தின் செய்தி தொடர்பாள கூறுகையில், நிமோனியா மற்றும் கொரோனாவால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இவரின் மரண செய்தியைக் கேட்டு, மகாராணியார், ஒரு தனிப்பட்ட இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார், அதே போன்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் போன்ற நாட்டின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,Tom Moore மருத்துவமனையில் காலமானார் என்பதைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
I'm so sorry to hear that Captain Tom has passed away in hospital.
— Matt Hancock (@MattHancock) February 2, 2021
He was a great British hero that showed the best of our country & I send my best wishes to his family at this time.
?? pic.twitter.com/e18s4UAwsP
அவர் ஒரு சிறந்த பிரிட்டிஷ் ஹீரோ, அவர் நம் நாட்டிற்கு சிறந்ததைக் காட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார்.




