2-வது நாளாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
தகவல் தொழில்நுட்ப தோல்வி காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA) இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக 40-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது.
200 விமானங்கள் ரத்து
வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என தொடர்ந்து இரண்டு நாட்களாக தகவல் தொழில்நுட்ப தோல்வியை காரணம் காட்டி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுவரை குறைந்தது 200 விமானங்கள், அவை முக்கியமாக உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Reuters
இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாளில் மட்டும் குறைந்தது 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 16,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கை
இது குறித்து இன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று விமானத்தை மீண்டும் முன்பதிவு செய்ய அல்லது பணத்தைத் திரும்பக் கோருவதற்கான விருப்பம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்க்குமாறு BA கேட்டுக் கொண்டது.
Wikimedia Commons/Tony Hisgett
ரத்துச் செய்யப்பட்ட இந்த விமானங்களில் பெரும்பாலானவை லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் போது, பயணிகளால் ஆன்லைனில் செக்-இன் செய்ய முடியவில்லை கூறப்படுகிறது. விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, BA பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.