விமானியின் கவனக்குறைவால் தீ! பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது என்ன? வெளியான அறிக்கை
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று விமானியின் கவனக்குறைவால் தீ விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கனடாவின் வான்கூவருக்குப் புறப்படத் தயாராக இருந்தபோது, விமானியின் அதிர்ச்சியூட்டும் தவறால் ஓடுபாதையில் இருந்து புறப்படுவதை அவசரமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் காட்விக் விமான நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
போயிங் 777 ரக விமானத்தின் பிரேக்குகளில் தீப்பிடித்ததற்கான காரணம், துணை விமானி ஓடுபாதையில் இடது மற்றும் வலதுபுற கட்டுப்பாடுகளை குழப்பிக் கொண்டதே என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளியான அறிக்கை
விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துணை விமானி "தற்செயலாக" தவறான நெம்புகோலை இயக்கியுள்ளார். விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பும் முக்கியமான தருணத்தில் இது உந்து விசையை (Thrust) குறைத்துள்ளது.
புலனாய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணையில், துணை விமானி வலதுபுறமாக நகர்த்த வேண்டிய ஒரு கட்டுப்பாட்டை இடதுபுறமாக நகர்த்தியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத செயலால் விமானம் சிறிது தூரம் வேகமாக சென்ற நிலையில், உடனடியாக டேக்-ஆஃப் (Take-off) நிறுத்தப்பட்டது.
இந்தத் தவறுக்கான சரியான காரணத்தை விளக்க முயன்ற அறிக்கையில், "அவர் அவ்வாறு செய்வதற்கு எந்த வெளிப்படையான காரணமும் இல்லை. அன்றைய தினம் ஏன் அப்படி செய்தார் என்பதற்கான காரணத்தை அவரால் கண்டறிய முடியவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |