28,000 அடிகள் கீழே சரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; மீண்டும் லண்டன் திரும்பியது
british airways flight descends to 28,000 feet: சிகாகோ நோக்கி சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், திடீரென 28,000 அடிகள் கீழே இறங்கிய நிலையில், மீண்டும் லண்டனுக்கு திரும்பியுள்ளது.
28,000 அடிகள் கீழே இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் BA295, லண்டன் ஹீத்ரோவிலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.50 க்கு , அமெரிக்காவின் சிகாகோ ஓ'ஹேர் நோக்கிச் புறப்பட்டது.

Flightradar24 தரவுகளின் படி, விமானம் அயர்லாந்து வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென 37,000 அடியிலிருந்து 9,000 அடி வரை கீழே இறங்கியுள்ளது.
#BA295 from London to Chicago squawking 7700 and descended down to 9000 feet above Ireland. https://t.co/KTkShOpJUh https://t.co/McVLR7XzEA
— Flightradar24 (@flightradar24) October 5, 2026
உடனடியாக விமானிகள், 7700 என்ற அவசர குறியீட்டை அனுப்பிவிட்டு, சிகாகோ பயணத்தை கைவிட்டு விமானத்தை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி திருப்பியுள்ளனர்.
7700 டிரான்ஸ்பாண்டர் குறியீடானது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தால் முன்னுரிமை அடிப்படையில் கையாளப்பட வேண்டிய ஒரு பொதுவான அவசரநிலையைக் குறிக்க, விமானப் பணியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் குறியீடு, அவசர உதவி தேவைப்படலாம் என்று கட்டுப்பாட்டாளர்களை எச்சரித்தாலும், அது காரணத்தைக் குறிப்பிடுவதில்லை.
விமானம் என்ன காரணத்திற்காக திடீரென 22,000 அடிகள் கீழே இறங்கியது என்பது குறித்த எந்த விவரங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நிருவனம் தற்போது வரை அறிவிக்கவில்லை.