பறக்கும் விமானத்தின் கழிவறையில் உடை இல்லாமல் மீட்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர் ஒருவர் விமானத்தின் கழிவறையில் நிர்வாணமாகவும், அதிக போதைப்பொருளை பயன்படுத்திய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளார்.
பதட்டமாகவும், வியர்வையில்
கலிபோர்னியாவிலிருந்து லண்டனுக்கு பயணப்படும் விமானத்திலேயே பேசிங்ஸ்டோக்கைச் சேர்ந்த 41 வயதான ஹேடன் பெந்தெகொஸ்ட் என்பவர் மோசமான நிலையில் காணப்பட்டார்.
அவர் விமானப் பயணத்திற்கு முந்தைய பாதுகாப்பு சோதனைகளுக்கு உதவத் தவறியதாகவும் பதட்டமாகவும், வியர்வையில் நனைந்தும் காணப்பட்டுள்ளார். மட்டுமின்றி, வயிற்றுப் பிடிப்பு பற்றி அவர் புகார் செய்தபோது, விமான ஊழியர்கள் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தனர்.
அவர் தனது சக ஊழியர்களிடம் உடை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு, பின்னர் கழிப்பறையில் தன்னைப் பூட்டிக் கொண்டுள்ளார். திடீரென அவர் கதவைத் திறக்க, தாம் உடைகள் எதையும் அணியவில்லை என்பதை அவர் உணரவில்லை என்றே கூறப்படுகிறது.
காலியான இருக்கையில் அவரை அமர வைப்பதற்கு முன்பு பெண் ஊழியர் ஒருவர் அவருக்கு ஆடை அணிவிக்க உதவ வேண்டியிருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உக்ஸ்பிரிட்ஜ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெந்தெகொஸ்ட், வேலையின் போது போதை மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என ஒப்புக்கொண்டார்.
பணிநீக்கம்
சம்பவத்தன்று விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் வரையில், 20 நிமிடத்திற்கு ஒருமுறை அவர் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். விமானம் தரையிறங்கியதும் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் இரத்தப் பரிசோதனையில் பெந்தெகொஸ்ட் உடம்பில் மெத்தம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்பு பின்னர் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தன்பாலின ஈர்ப்பாளரான ஹேடன் பெந்தெகொஸ்ட் தனது துணையுடன் வசித்து வருகிறார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |