அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் திடீர் பதவிநீக்கம்: பின்னணி
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமிக்கப்பட்டவர், திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் பதவிநீக்கம்
கெய்ர் ஸ்டார்மர் தலையிலான அரசு, பீற்றர் மாண்டெல்சன் (Peter Mandelson) என்பவரை பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமித்தது.
பீற்றர், பிரித்தானிய அமெரிக்க உறவு வலுப்படுவதில் முக்கிய பங்காற்றிவந்தார். ஆனால், திடீரென அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னணி
அதாவது, பீற்றர், பல இளம்பெண்களையும், சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
அதுவும், எப்ஸ்டீன் சிறையிலடைக்கப்பட்டபின்பும் அவருடன் ஆழ்ந்த நட்பு பாராட்டிவந்துள்ளார் பீற்றர்.
பீற்றர் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் சில தற்போது வெளியாகியுள்ள நிலையில், எப்ஸ்டீன் சிறையில் அடைக்கப்பட்டதே தவறு என கருத்து தெரிவித்துள்ளார் பீற்றர்.
மேலும், எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், சிறுபிள்ளை ஒருத்திய நாசம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அவரை, விடுதலை பெற போராடுமாறு வலியுறுத்திய பீற்றர், உங்கள் நண்பர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம், உங்களை நேசிக்கிறோம் (Your friends stay with you and love you) என்றும் குறிப்பிட்டுள்ளார் பீற்றர்.
இந்த மின்னஞ்சல்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க தூதர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் பீற்றர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |