சுவிஸ் எல்லைக்குள் நுழைந்த பிரித்தானிய இராணுவ ஹெலிகொப்டர்கள்...
நேற்று சுவிட்சர்லாந்துக்குள் நான்கு பிரித்தானிய இராணுவ ஹெலிகொப்டர்கள் நுழைந்துள்ளன.
நேற்று மதியம், Ticino பகுதியில் அமைந்துள்ள Luganoவுக்கு அருகில், அந்த ஹெலிகொப்டர்கள் எல்லையைக் கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து, Vaud மாகாணத்திலுள்ள France at La Givrine என்ற பகுதி வழியாக வெளியேறியுள்ளன.
இது குறித்து விளக்கமளித்த சுவிஸ் இராணுவம், பிரித்தானிய ஹெலிகொப்டர்கள் அந்த வழியாக கடந்து போக மட்டுமே செய்தன என்றும், அவை தரையிறங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அதிகாரிகள் அந்த பயணத்துக்காக சுவிட்சர்லாந்திடம் சிறப்பு அனுமதி கோரியதாக கூறப்படும் நிலையில், எதற்காக அந்த ஹெலிகொப்டர்கள் சுவிட்சர்லாந்து வழியாக பயணித்தன என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.