ராணுவ வீரர்கள் இருவர் செய்த மோசமான குற்றம்: பொலிசாரிடம் சிக்கியதும் ஒருவர் செய்த செயல்
பிரித்தானியாவில், ராணுவ வீரர்கள் இருவர் போதைப்பொருள் விற்க முயன்றபோது பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள்.
போதைப்பொருள் விற்க திட்டமிட்ட ராணுவ வீரர்கள்
நாட்டைக் காக்க உயிரையே பணயம் வைக்கத் துணிந்த ராணுவ வீரர்கள் இருவர், போதைப்பொருள் விற்க முயன்றபோது பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள்.
பொலிசாரிடம் சிக்கியதும், அவர்களில் ஒருவர் தன் மகளுக்கு உடல் நலமில்லை என்று கூறி தன் மனைவியுடன் தொலைபேசியில் பேசவேண்டும் என கேட்டுள்ளார்.
பொலிசார் அனுமதியளித்ததும், மனைவியை அழைத்த அவர், வீட்டில் ஒரு பை வைத்திருக்கிறேன், அதை குப்பையில் போட்டுவிடு, எந்தக் கேள்வியும் கேட்காதே என்று ரகசியமாகக் கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு முன்பே அவரது வீட்டை பொலிசார் ட்ரோன் கமெரா மூலம் கண்காணிப்பது அவருக்குத் தெரியாது.
அவரது மனைவி போதைப்பொருள் அடங்கிய அந்தப் பையை குப்பையில் போடும்போது கமெராவில் சிக்கிவிட்டார்.
இது தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால், விசாரணை, மூடிய அறைக்குள் நடைபெற்றது.
அத்துடன், நீதிமன்றத்துக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படாததுடன், கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் இருவரும் ஒரு திரைக்குப் பின்னால் அமரவைக்கப்பட்டனர்.
நாட்டுக்காக உண்மையாக உழைத்துவந்த அவர்கள் இருவரும் இப்படி ஒரு குற்றத்தைச் செய்ய பேராசைதான் காரணம் என்று கூறிய நீதிபதி, அவர்களுக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தாலும், அதை 18 மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |