மலை உச்சியிலிருந்து கீழே விழுந்த பிரித்தானியர் மரணம்: சோகத்தில் முடிந்த சாகசம்
400 மீட்டர் மலை உச்சியிலிருந்து விங்சூட் அணிந்து குதித்த பிரித்தானிய பேஸ் ஜம்பர் குன்றின் மீது விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மலை உச்சியிலிருந்து கீழே விழுந்த பிரித்தானியர் மரணம்
இத்தாலியின் ட்ரெண்டினோவில் உள்ள 400 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட மலை உச்சியிலிருந்து கீழே விழுந்ததில் மார்க் ஆண்ட்ரூஸ் (Mark Andrews) என்ற பிரித்தானியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஆண்ட்ரூஸ், ஒரு அனுபவம் வாய்ந்த பேஸ் ஜம்பர், இருப்பினும் விழுந்த தாக்கத்தில் உடனடியாக உயிரிழந்தார். அவர் தனது விங்சூட்டையும் பாராசூட்டையும் அணிந்திருந்தார். ஆனால், சரியான நேரத்தில் அதனைப் பயன்படுத்த முடிந்ததா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.
Credit: @jamesboole/@learntobasejump/Instagram
கார்ன்வாலில் உள்ள ரெட்ரூத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ், 600-க்கும் மேற்பட்ட பேஸ் ஜம்பிங் அனுபவம் கொண்டவர். அவர் ருமேனியாவின் புக்கரெஸ்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
அவர் குதிக்கவேண்டிய இடத்திற்குத் தனியாக சென்றார், ஆனால் மற்றொரு பேஸ் ஜம்பர் தான் அவர் கீழே விழுந்ததைக் கண்டதும் அவசர சேவைக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர், மீட்பு ஹெலிகாப்டர் வந்து அவரது உடலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றது.
மார்க் ஆண்ட்ரூஸ் இத்தாலியில் பல்வேறு பேஸ்-ஜம்பிங் நிகழ்வுகளில் வழக்கமாக இருந்தார், ஆனால் பாலங்கள் மற்றும் வானளாவிய கட்டிடங்களில் இருந்து உலகம் முழுவதும் பேஸ்-ஜம்ப் செய்து சாதனைக்களை செய்துள்ளார்.
Credit: @jamesboole/@learntobasejump/Instagram
ஏற்கெனெவே ஒரு பிரித்தானியர் அது இடத்தில மரணம்
ஆண்ட்ரூஸ் இறந்த அதே இடத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் மற்றொரு பிரிட்டிஷ் பேஸ் ஜம்பர் இறந்தார். ஜூன் 2, 2022 அன்று, பாராசூட் திறக்கத் தவறியதால், Dylan Morris Roberts கீழே இறங்கும்போது பாறையில் மோதி இறந்தார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த பகுதியானது பேஸ் ஜம்ப்க்கு மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மிகவும் தந்திரமான சூழ்ச்சியைச் செய்ய நிபுணர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
BASE ஜம்பிங் என்றால் என்ன?
BASE jumping. credit: Oliver Furrer/Getty Images
பேஸ் ஜம்பிங் என்பது அடிப்படையில் ஸ்கைடிவிங் தான். ஆனால் விமானத்திலிருந்து குதிக்காமல், இந்த விளையாட்டில் சிலிர்ப்பு தேடுபவர்கள் ஒரு நிலையான பொருட்களிலிருந்து குதித்து, தரையில் இறங்குவதற்கு பாராசூட்டைப் பயன்படுத்துகின்றனர். கட்டிடங்கள், ஆண்டெனாக்கள், பாலங்கள் மற்றும் மலையுச்சிகள், பாறைகள் ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜம்பிங் பாயிண்ட்கள் என்பதால், இந்த விளையாட்டு அதன் சுருக்கமான BASE Jumping என பெயர் பெற்றது, இது பொதுவாக BASE என்று அழைக்கப்படுகிறது.
சுவாரசியமான மெய் சிலிர்க்கவைக்கும் விளையாட்டாக இருந்தாலும், இதில் அதிக ஆபத்துகள் உள்ளன. அறிக்கைகளின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.