பிரித்தானியாவுக்கு வெற்றி! பிரான்சில் கைப்பற்றப்பட்ட பிரித்தானிய படகு விடுவிப்பு!
சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பிரான்ஸ் கடற்கரையில் கைப்பற்றப்பட்ட பிரித்தானிய கப்பலை பிரெஞ்சு அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
ஸ்காட்டிஷ்-பதிவு செய்யப்பட்ட Cornelis Gert Jan எனும் ஸ்காலப் ட்ரெட்ஜர் வகை மீன்பிடி படகு, பிரெஞ்சு எல்லைக்கு உட்பட்ட Le Havre துறைமுக பகுதிக்குள், நார்மண்டி கடற்கரையில் நங்கூரமிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக, கடந்த வாரம் பிரெஞ்சு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சரியான உரிமம் இல்லாமல் பிரெஞ்சு பிராந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி அந்த படகின் கேப்டன் Jondy Ward மற்றும் அவரது குழுவினருடன் பிரெஞ்சு கடல் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டார்.
அவர்கள் பிரெஞ்சு துப்பறியும் நபர்களால் பல மணிநேரம் கேள்விகளை எதிர்கொண்டனர். பின்னர் ஜாண்டி வார்டு விடுவிக்க இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், அவர் தனது இழுவை படகிலேயே கடந்த 7 நாட்களாக தங்க விரும்பினார்.
படகையும் குழுவினரையும் விடுவிக்க படகின் உரிமையாளர் குறைந்தது 125,000 பவுண்டுகள் டெபாசிட் செலுத்துமாறு கட்டாயப்படுத்தபட்டது.
ஏற்கெனெவே, பிரித்தானியாவருக்கும் பிரான்சுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை அதிகரிக்கச்செய்தது.
இந்த நிலையில், நீதிமன்ற தலையீட்டின் பின், படகின் கேப்டன் £125,000, வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று முந்தைய கோரிக்கையை நிராகரிக்கப்பட்டது. மேலும், நிபந்தனைகள் இன்றி படகு விடுவிக்கப்படலாம் என உத்தரவிடப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு, மீன்பிடி உரிமைகள் தொடர்பாக பிரான்சுக்கு லண்டனுக்கும் இடையே ஏற்பட்ட பரந்த அரசியல் சண்டையில் இந்த கப்பல் ஒரு சிப்பாய் நகர்வு என கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவத்தில் படகு விடுவிக்கப்பட்டது பிரித்தானியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.