ஐரோப்பிய நாடொன்றில் 3 வயது பிரித்தானிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
கிரீஸ் நாட்டில் மூன்று வயது பிரித்தானிய சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரித்தானிய சிறுவன்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான தீவு கிரீஸின் Zante. இந்தத் தீவிற்கு பிரித்தானிய குடும்பம் ஒன்று சுற்றுலாவுக்கு சென்றுள்ளது.
அங்கு ஒரு சொகுசு வில்லாவில் அனைவரும் தங்கியிருந்துள்ளனர். இரவு உணவிற்கு குடும்பத்தினர் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென 3 வயது சிறுவன் காணாமல் போயிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சிறுவனை தேடியபோது நீச்சல் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
தூதரக ஆதரவு
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், என்ன நடந்தது என்பதற்கான சரியான சூழ்நிலைகள் குறித்து வழக்குரைஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தங்கள் நாட்டில் இறந்த குழந்தையின் பிரித்தானிய குடும்பத்திற்கு தூதரக ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |