ஆசிய நாடொன்றில் மனைவியுடன் கைதான பிரித்தானிய தொழிலதிபர்! சடலமாக மிதந்த இளம்பெண்
ஹாங்காங்கில் பிரித்தானிய தொழிலதிபர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பிரித்தானிய தொழிலதிபர்
இந்தோனேசியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணொருவர், திங்கட்கிழமை காலை ஹாங்காங்கில் அருவியின் அடிப்பகுதியில் சடலமாக கிடந்தார்.
தலையில் பலத்த காயமடைந்திருந்த அவர், பின்னர் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது என the South China Morning Post செய்தி வெளியிட்டது.
இதனையடுத்து இறந்து கிடந்த பெண் பிரித்தானிய தொழிலதிபர் ஒருவரின் வீட்டுப்பணிப்பெண் என தெரிய வந்தது.
சந்தேகத்தின் பேரில் கைது
அதன் பின்னர் 34 வயதான குறித்த நபரையும், அவரது ஹாங்காங் மனைவியையும் மேற்கு கவுலூன் ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
அந்நபரின் 36 வயது மனைவி, தனது கணவருக்கு கொலை சம்பவத்தில் உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் காவலில்
பொலிசாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பாதிக்கப்பட்டவருடன் அருவி பூங்காவிற்கு சென்றுள்ளார். ஆனால், சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர் மட்டும் தனியாக ஒரு டாக்சியில் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரித்தானிய நபர் கிழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை நிறுத்தப்படுவார் என்றும், அவரது மனைவி அடுத்த மாத இறுதியில் மீண்டும் காவலில் எடுக்கப்படுவார் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, பிரித்தானியரும் அவரது ஹாங்காங் மனைவியும் திருமணத்திற்கு பிறகு குடியேறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |