நேபாளத்தில் பிரித்தானியர் ஒருவர் மீட்பு: ராணுவம் தகவல்
An army spokesman told reporters that a British citizen has been rescued in Nepal: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களை தேடும் பணியின்போது பிரித்தானியர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதே நேரத்தில், மீட்புப் பணியும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
பிரித்தானியர் ஒருவர் மீட்பு
நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 1,050 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள பேரிடர் மீட்பு ஏஜன்சி தெரிவித்துள்ள நிலையில், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 4,000 பேரின் நிலைமை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.

அதே நேரத்தில், நேற்று 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 118 பேர் நேபாளக் குடிமக்கள் என்றும், ஒருவர் பிரித்தானியக் குடிமகன் என்றும் நேபாள ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அவரது அடையாளங்கள் இதுவரை வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |