இறுகும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்... பிரித்தானிய குடிமக்கள் உடனடியாக வெளியேற வலியுறுத்தல்
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் மோதல் நாளுக்கு நாள் இறுகிவரும் நிலையில், பிரித்தானிய மக்கள் உடனடியாக லெபனானில் இருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா சமீபத்திய இஸ்ரேலின் நகர்வுகள் தொடர்பில் தமது ஆதரவாளர்களுக்கு உரையாற்றும் போது இஸ்ரேல் போர் விமானங்கள் பெய்ரூட் நகரை வட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல் முன்னெடுத்த பேஜர் தாக்குதல் மற்றும் ரேடியோ வெடிப்பு சம்பவங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள ஹசன் நஸ்ரல்லா, பதிலடி உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு தாக்குதல் சம்பவங்களிலும் மொத்தமாக 37 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவிக்கையில், லெபனான் நாட்டில் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது என்றார். அத்துடன் லெபனான் பிரதமர் Najib Mikati-ஐ தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லெபனானில் தங்கியுள்ள பிரித்தானிய மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் தீவிரமடையலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா போர் பிரகடனம்
விமான போக்குவரத்து வாய்ப்பு இருக்கும் போதே, அதை பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டேவிட் லாம்மி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், லெபனானுக்கான அனைத்து பயண திட்டங்களையும் பிரித்தானிய மக்கள் ரத்து செய்ய வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, காஸாவில் போர் முடிவுக்கு வரும் வரையில் இஸ்ரேலுக்கு எதிரான லெபனானின் எதிர்ப்பு நிலை தொடரும் என்றே நஸ்ரல்லா எச்சரித்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant தெரிவிக்கையில், போரில் புதிய ஒரு கட்டத்தை இஸ்ரேல் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இஸ்ரேலின் இந்த பாதுகாப்பு அத்துமீறலை அமெரிக்கா உள்ளிட்ட முதன்மை நாடுகள் வேடிக்கை பார்ப்பதுடன்,
இதே நகர்வை இஸ்ரேலுக்கு வேறு நாடுகள் முன்னெடுத்தால் அமெரிக்கா இந்த நேரம் போர் பிரகடனம் செய்திருக்காதா என நிபுணர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |