சிறுபடகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோருக்கு குடியுரிமை கிடையாது
சிறுபடகுகள், லொறி அல்லது எவ்வித முறையற்ற வகையில் பிரித்தானியாவில் நுழைவோருக்கும் இனி குடியுரிமை வழங்கப்படாது என சமீபத்தில் பிரித்தானிய உள்துறை அலுவகம் விதி மாற்றம் ஒன்றை வெளியிட்டது.
அந்த விதியை எதிர்த்து அகதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
குடியுரிமை மறுக்கும் விதி
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதாவது, இம்மாதம் 10ஆம் திகதி முதல் பிரித்தானிய குடியுரிமை கோரி விண்ணப்பிப்போர், அவர்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களாக இருந்தால், அவர்கள் பிரித்தானியாவில் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என கூறும் புதிய விதி ஒன்றை பிரித்தானியா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
முதல் வழக்கு
இந்நிலையில், அந்த விதிக்கு எதிராக முதல் வழக்கு நீதிமன்றத்தை சென்றடைந்துள்ளது.
ஆம், அந்த விதியை எதிர்த்து 21 வயதான, ஆப்கன் நாட்டவரான அகதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது 14 வயதில் தாலிபான்களுக்குத் தப்பி லொறி ஒன்றின் பின்னால் ஏற்றப்பட்டு பிரித்தானியாவுக்கு கடத்தப்பட்டார் அவர்.
அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டு, பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அனுமதியும் வழங்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 1ஆம் திகதி அவர் பிரித்தானிய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இருந்தார்.
ஆனால், திடீரென பிரித்தானிய அரசு, பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் பிரித்தானிய குடியுரிமை கோரி விண்ணப்பிப்போர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களாக இருந்தால், அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என கூறும் புதிய விதி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆகவே, இத்தனை ஆண்டுகள் காத்திருந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் இப்படி ஒரு விதி அறிமுகம் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்த ஆப்கன் அகதி, அந்த விதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரைப்போலவே, பிரித்தானியாவில் வாழும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த புதிய விதியால் பாதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |