கனேடிய மாகாணம் ஒன்றில் ஒரே மாதத்தில் 207 பேரை பலிகொண்ட பயங்கர விடயம்
கனேடிய மாகாணம் ஒன்றி, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 207 பேர் பலியாகியுள்ளார்கள். அவர்கள் பலியானது, கொரோனா தொற்றுக்கு அல்ல!
இந்த 207 பேரும், சட்ட விரோத போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளார்கள். இன்னமும் பலர் பலியாகி வருகிறார்கள். அந்த மாகாணம் பிரிட்டிஷ் கொலம்பியா!
நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் இத்தனை அதிகம் பேர் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதால் பலியானது ஜனவரியில்தான் என்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாளொன்றிற்கு ஆறு பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள்.
மேலும், முந்தைய மாதங்களைப் பார்க்கும்போது, பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த நவம்பரில் 210 பேரும், டிசம்பரில் 215 பேரும் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளார்கள்.
2021இல் மட்டும்,சட்ட விரோத போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,224.
உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் என வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
I find the majority of society doesn't really care about the illicit drug toxicity crisis, or addiction until it impacts them directly, which is sad.? If we keep going the way we are it's a guarantee to impact your ? family sooner or later. #ChangeBadDrugPolicies
— guyfelicella (@guyfelicella) February 22, 2022