மீண்டும் நூற்றுக்கணக்கான வீடுகளிலுள்ளோரை வெளியேற உத்தரவிட்டுள்ள கனேடிய அதிகாரிகள்: காரணம் இதுதான்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்கனவே பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது பலத்த காற்று வீசத்தொடங்கியுள்ளதால், நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், Okanagan பகுதி முழுவதிலுமுள்ள பகுதிகளில் காட்டுத்தீ அதிகரித்துவருவதைத் தொடர்ந்து பல நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
புகை மற்றும் பலத்த காற்று காரணமாக, ஹெலிகொப்டர்கள் மூலம் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்துக்கு காற்று வீசுவதால், பல இடங்களில் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள்.
Woah! That was a terrifying experience driving the #coquihalla, just north of Britton Creek. I’m shaking! ?? We made it through just as they were stopping southbound traffic @DriveBC #bcwildfires #Kamloops 7pm August 15, 2021 pic.twitter.com/1hOepHLSmE
— Marina LeClair (@MarinaLeClair) August 16, 2021