அந்தரங்க காணொளியை வெளியிடுவதாக மிரட்டல்... கனேடிய சிறுவன் எடுத்த பகீர் முடிவு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவனுக்கு இணையமூடாக மிரட்டல் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இணையமூடாக விடுக்கப்பட்ட மிரட்டல்
குறித்த வழக்கை பொலிசார் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அக்டோபர் 12ம் திகதி இளவரசர் ஜார்ஜ் பகுதி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.
அங்கே துப்பாக்கி குண்டு காயங்களுடன் 12 வயது சிறுவன் உயிருக்கு போராடுவதை அறிந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தொடர்புடைய சிறுவன் இணையமூடாக விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேக நபரை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, இணையத்தில் அறிமுகமில்லாத நபர்களுடன் பிள்லைகள் அரட்டை அடிப்பதை பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வெளியிடுவதாக கூறி பணம் பறிப்பது
இணையமூடாக இதுபோன்ற மிரட்டல்கள் எப்போதும் துயரத்தில் முடியும் என கூற முடியாது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் அதில் ஈடுபடும் இளைஞர் ஒருவரின் ஆயுள் வரையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
@getty
இணையமூடாக விடுக்கப்படும் அந்த மிரட்டல் என்பது, கைப்பற்றப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளியை வெளியிடுவதாக கூறி பணம் பறிப்பது அல்லது உடல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முயற்சிப்பதேயாகும் என பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
இதுபோன்ற மிரட்டல் இளவரசர் ஜார்ஜ் பகுதியில் அதிகரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த செயல்பாடு 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது என்றும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இளவரசர் ஜார்ஜ் பகுதி பொலிசாருக்கு 62 புகார்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |