அவசர நிலையை பிரகடனம் செய்த கனேடிய மாகாணம்: மிக மோசமான சூழல் என பிரீமியர்
வேகமாக பரவி வரும் காட்டுத்தீ நெருக்கடி காரணமாக, மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் எபி.
மிக மோசமான காட்டுத்தீ நெருக்கடி
மாகாணத்தின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் டேவிட் எபி, கடந்த 24 மணி நேரத்தில் நிலைமை மிக வேகமாக மோசமடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Credit: Mike McArthur
மேலும், ஒரு மணி நேரத்தில் 4,500 குடியிருப்புகளில் இருந்து சுமார் 15,000 மக்களை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள ஆயத்தமாகும் பொருட்டே தற்போது மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எபி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர் போவின் மா மக்களை வலியுறுத்தியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதால், பாதுகாப்பான தங்கும் இடத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்றார்.
Credit: Les York
380 பகுதிகளில் காட்டுத்தீ தீவிரம்
இதனிடையே, மத்திய அவசரகால தயாரிப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவிக்கையில், மாகாண வனத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு, உதவ தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு வெளியான தகவலின் அடிப்படையில், பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் 380 பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் இதுவரை 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுக்கு தீயில் சிக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
I’ve just spoken with Minister @BruceRalston about the worsening situation in British Columbia. We talked about wildfire response operations and how the federal government can help.
— Harjit Sajjan (@HarjitSajjan) August 19, 2023
We are ready to support in any way needed.
அடுத்த 24 மணி நேரம் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருக்கும் எனவும், குடியிருப்புகளையும் கட்டிடங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |