ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்த பெண்... கர்ப்பமுற்றதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை: ஒரு வித்தியாசமான வழக்கு
திருமணமான ஒரு பெண், இணையம் வாயிலாக தொடர்புகொண்ட மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் கர்ப்பமுற்றதால் ஒரு வித்தியாசமான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், திருமணமான பெண் ஒருவர், இணையம் வாயிலாக சந்தித்து உறவுவைத்துக்கொள்ளும் இணையதளம் ஒன்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.
அப்போது, அவர் ஒரு ஆணை சந்தித்துள்ளார். இருவரும் பல முறை நெருக்கமாக இருந்துள்ளார்கள். விளைவாக அந்த பெண் கர்ப்பமுற்றிருக்கிறார். அதே நேரத்தில் அவர் தன் கணவருடனும் தாம்பத்ய வாழ்வை மேற்கொண்டிருக்கிறார்.
தான் கர்ப்பமடைந்ததும், தனக்கு கருச்சிதவு ஏற்பட்டதாக பொய் சொல்லிவிட்டு, தனது இணையதள காதலனுடனான உறவைத் துண்டித்துக்கொண்டிருக்கிறார் அந்த பெண்.
அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, அந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அந்த பெண்ணின் கனவர் பெயரே குழந்தையின் தந்தையின் பெயராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணை எப்படி கணிப்பதென்று தெரியவில்லை, ஏனென்றால், மீண்டும் ஒரு வருடம் கழித்து தனது இணையதள காதலனை தொடர்புகொண்டு, தன் குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றி, நாம் இருவரும் இணைந்து அழகான ஒரு குழந்தையை உருவாக்கியிருக்கிறோம், நீங்கள் எனக்கு கொடுத்த பரிசுகளில் இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்கமுடியாது என்று கூறியிருக்கிறார்.
பல முறை அந்த பெண்ணையும் குழந்தையையும் அந்த நபர் சந்தித்திருக்கிறார். அதன் பிறகு, மீண்டும் வழக்கம் போல அவருடனான தன் உறவை துண்டித்துக்கொண்டிருக்கிறார் அந்த பெண். இம்முறை அந்த ஆண் பேசாமல் இருக்காமல், நேரே நீதிமன்றத்துக்கு சென்று விட்டார். அதற்குப் பிறகுதான் இப்படி ஒரு பிரச்சினை ஆகிவிட்டது என்று தன் கணவனிடம் கூறியிருக்கிறார் அந்த பெண்.
அந்த குழந்தை தன்னுடையதா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தவேண்டும் என்று அந்த இணையதள காதலன் கோர, அது தற்காலிகமாக நடந்த ஒரு சந்திப்பு, அப்போது அந்த பெண் தற்செயலாக அந்த ஆணுடன் உறவுகொண்டுள்ளார், அவர்களுக்கிடையிலான உறவு அவ்வளவுதான் என்று வாதிட்ட அந்த பெண்ணின் சட்டத்தரணி, மரபணு சோதனைக்கு குழந்தையை உட்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தைக் கோரியிருக்கிறார்.
ஆனால், தன் குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றி, நாம் இருவரும்
இணைந்து அழகான ஒரு குழந்தையை உருவாக்கியிருக்கிறோம், நீங்கள் எனக்கு கொடுத்த
பரிசுகளில் இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்கமுடியாது என்றெல்லாம் அவர்
குறுஞ்செய்திகள் அனுப்பியதைப் பார்க்கும்போது, இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு
உறவு அல்ல என்று கூறிவிட்ட நீதிபதியான Justine Saunders, மரபணு சோதனைக்கு
உத்தரவிட்டுள்ளார்.