ஆயுதம் ஏந்திய காவலர்களால்... விமானத்தில் இருந்து கீழிறக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: பரபரப்பு வீடியோ
கனடாவில் தங்களது விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப முற்பட்ட பிரித்தானிய தம்பதிகள் ஆயுதம் ஏந்திய காவலர்களால் வலுக்கட்டாயமாக கீழ் இறக்கப்பட்டு இருப்பது விமானத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட் பிரெய்லி(71) மற்றும் அவரது மனைவி பாட்ரிசியா(68) ஆகிய இருவரும் தங்களது விடுமுறை நாள்களை கனடாவில் கழித்துவிட்டு, மீண்டும் பிரித்தானியா திரும்புவதற்காக ஏர் கனடா விமானத்தில் காத்துக் கொண்டு இருந்தபோது ஆயுதமேந்திய காவலர்களால் வலுக்கட்டயாமாக கீழ் இறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களுடன் சேர்த்து, கர்ப்பிணி பெண் ஒருவர் மற்றும் ஃபார்முலா ரேசிங் (F1)அணியின் உறுப்பினர்கள் சிலர் என 25 பேரை ஆயுதமேந்திய காவலர்கள் வலுக்கட்டயமாக விமானத்தில் இருந்து கீழ் இறங்க வற்புறுத்தியுள்ளனர்.
அத்துடன் ரிச்சர்ட் பிரெய்லி(71) மற்றும் அவரது மனைவி பாட்ரிசியா(68) என்ற இரண்டு பிரித்தானிய பயணிகளுடன் கீழ் இறக்கப்பட்ட 25 பயணிகளுக்கும், கீழ் இறக்கப்பட்டதற்கான எந்தவொரு விளக்கத்தையும் அந்த ஆயுதம் ஏந்திய காவலர்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்ட்ரீலில் இருந்து ஹீத்ரோவுக்கு பயணிக்க இருந்த பிரித்தானிய தம்பதிகள் விமானத்தில் இருந்து நடு இரவில் கீழ் இறக்கப்பட்ட நிலையில், போதிய ரூம் வசதிகள் கிடைக்காமல் விமான நிலையத்திலேயே பாதிக்கப்பட்டவர்கள் இரவு முழுவதும் சுற்றி திரியும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் வெளியேற்றபட்டது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் முதலில் தெரிவித்த கருத்தில், கீழ் இறக்கப்பட்டவர்கள் ஒருவேளை மதுபானம் அருந்தி இருக்கலாம், அல்லது முககவசம் அணியாமல் இருந்து இருக்கலாம் அதன் காரணமாக கீழ் இறக்கப்பட்டு இருப்பார் எனத் தெரிவித்தனர்.
ஆனால் அந்த பிரித்தானிய தம்பதி எத்தகைய மதுபானமும் அருந்தவில்லை மற்றும் முககவசமும் சரியான முறையில் அணிந்து இருந்த போதிலும் எந்தவொரு போதிய விளக்கங்களும் வழங்காமல் காவலர்கள் கடுமையாக நடந்துக் கொண்டதாக தெரிவந்துள்ளது.
இந்தநிலையில், பிரித்தானிய தம்பதிகள் மற்றும் அவர்களுடன் சேர்த்து கீழ் இறக்கப்பட்ட 25 பேர் குறித்த தகவல் இணையத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனம், பயணிகள் கீழ் இறக்கப்பட்டது தொடர்பாக போதிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கண்ணிவெடிகளை அகற்றும் ரோபோ நாய்கள்: உக்ரைனில் களமிறங்கும் அமெரிக்க தொழில்நுட்பம்
விதிமுறைகளை மீறிய பயணிகளை வெளியேற்றும் போது, தொடர்பில்லாத சில நபர்களும் இறக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.