அவுஸ்திரேலியாவில் சிக்கிய பிரித்தானிய தம்பதி: 15 ஆண்டுகள் சிறை..என்ன நடந்தது?
அவுஸ்திரேலியாவில் வாடகைக் காரின் டிக்கியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள்
அவுஸ்திரேலியாவில் தம்பதி குறித்து அண்டை வீட்டார் புகார் அளித்ததன் பேரில், ஒரு குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வாடகைக் காரின் டிக்கியில் கெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரித்தானிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பிரித்தானிய தம்பதி
முதற்கட்ட விசாரணையில், குறித்த பிரித்தானிய தம்பதி 30 வயது ஜாக் ஃபாரெல்லி மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான 23 வயது டெமி மெக்டெய்ட் என தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது சுமார் 107 கிலோகிராம் அளவிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் என்றும், அதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |