பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு: கொள்ளை முயற்சி காரணமா?
பிரான்சில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த ஒரு பிரித்தானிய தம்பதியர் நேற்று மதியம் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு
பிரித்தானியாவிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பிரான்சிலுள்ள தங்கள் இரண்டாவது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர் ஒரு தம்பதியர்.
தெற்கு பிரான்சிலுள்ள Les Pesquiès என்னுமிடத்தில் அந்த வீடு அமைந்துள்ளது.
தங்கள் 60 வயதுகளிலிருக்கும் அந்த இருவரும், அந்த பகுதியிலும், பிரித்தானியாவிலும் மிகவும் பிரபலமானவர்களாம். ஆனால், பொலிசார் அவர்களுடைய அடையாளங்களை வெளியிடவில்லை.
கொள்ளை முயற்சி காரணமா?
நேற்று மதியம் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இந்த தம்பதியர் வீட்டுக்குச் செல்ல, அவர்கள் இருவரும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாரை அழைத்துள்ளார்.
மரங்கள் அடர்ந்த பகுதியில், அந்த வீடு தனியாக இருந்ததால், யாராவது அந்த வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சிக்கலாம் என்றும், கொள்ளை முயற்சியின்போது, தம்பதியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |