வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட பிரபல பிரித்தானிய தம்பதி: உடல்களை முதலைகளுக்கு விருந்தாக்கிய கொடூரம்
தென்னாப்பிரிக்காவில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மூவர் குழுவால் பிரித்தானிய தம்பதி அடித்துக் கொல்லப்பட்டு முதலைகளுக்கும் விருந்தாக்கிய கொடூரம் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
தாவரவியலாளர்கள் தம்பதி
குறித்த மூவர் குழு, அந்த தம்பதியின் வங்கி அட்டையை பயன்படுத்தி சுமார் 37,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளதும் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Credit: pacific bulb society
உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர்கள் ராட் சாண்டர்ஸ்(74), மற்றும் அவரது மனைவி ரேச்சல்(63) ஆகியோரே கொல்லப்பட்ட அந்த தம்பதி. இந்த வழக்கில் சைஃபுதீன் அஸ்லாம்(41), அவரது மனைவி பீபி பாத்திமா படேல்(30), மற்றும் மலாவிய முசா அகமது ஜாக்சன்(35), ஆகிய மூவர் மீது கொடூரமான முறையில் கொலை செய்ததாகவும் கொள்ளையடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய தம்பதியின் சடலங்களை அவர்கள் முதலைகள் வாழும் நதியில் வீசியுள்ளனர். இந்த நிலையில், மிகவும் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை டி.என்.ஏ சோதனை மூலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Credit: facebook
மட்டுமின்றி, உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவிக்கையில், முதலைகள் மட்டுமின்றி, எலிகளும் நாய்களும் உணவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Ngoye வனப்பகுதியில் வைத்து
ஆண்டுக்கு ஆறு மாதங்கள் தென்னாப்பிரிக்கா மலைப் பிரதேசங்களில் ஆய்வு மேற்கொள்ளும் இந்த தாவரவியலாளர்கள் தம்பதி அரிதான கிளாடியோலி தாவர விதைகளைத் தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று Ngoye வனப்பகுதியில் வைத்து குறித்த தம்பதி தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் கடத்தப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.
Credit: pacific bulb society
2018 பிப்ரவரி 4ம் திகதி கேப்டவுனில் உள்ள தங்களின் குடியிருப்பில் இருந்து வெளியே சென்ற இந்த தம்பதி கடைசியாக 8ம் திகதி தங்களது சக ஊழியர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் 10ம் திகதி தாவரவியலாளர்கள் தம்பதி கடத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
15ம் திகதிக்குள் அந்த மூவர் குழு தாவரவியலாளர்கள் தம்பதியை கொலை செய்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.