அவுஸ்திரேலியாவில் கடல் நீரில் மூழ்கிய பிரித்தானிய தம்பதி: காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
அவுஸ்திரேலிய கடற்கரையில் பிரித்தானிய சுற்றுலா தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்கிய பிரித்தானிய தம்பதி
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கடற்கரைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதிகளான 66 வயது கணவனும், 64 வயது மனைவியும் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இல்லவாரா பகுதியில் வசிக்கும் உறவினர்களை சந்திப்பதற்காக அவுஸ்திரேலியா வந்த பிரித்தானிய தம்பதி சிட்னியிலிருந்து 114 கி.மீ தொலைவில் உள்ள ஷெல்ஹார்பர் கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தம்பதிகளில் கடலில் தத்தளிப்பதை பார்த்து உடனடியாக அவர்களை மீட்ட அங்கிருந்த பொதுமக்கள், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் துரதிர்ஷ்டவசமாக தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானிய தம்பதிக்கு ஏற்பட்ட இந்த விபத்தின் போது அவர்களின் உறவினர்கள் சிலரும் அதே கடற்கரையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலில் ஏற்பட்ட வலிமையான நீர் சுழற்சியே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |