தலிபான்களால் சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: ஆப்கான் சிறையின் பயங்கர அனுபவங்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பிடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய தம்பதி சமீபத்தில் தங்களது திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தம்பதி
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி பீட்டர் மற்றும் பார்பி ரெனால்ட்ஸ் தங்களது ஏழு மாத சிறைவாசம் குறித்து திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த 80 மற்றும் 76 வயதுடைய தம்பதி அவர்களுடைய சிறை காலத்தில் 10 வெவ்வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகவும், ஒரு நேரத்தில் நாம் தூக்கிலிடலாம் என்று எண்ணியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதி கடந்த 1ம் திகதி காபூலில் இருந்து பாமியானுக்கு விமானத்தில் சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் அவர்கள் இறுதியில் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் ஆகியவை அவர்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பிரித்தானிய திரும்பிய தம்பதி
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி சனிக்கிழமை பிரித்தானியா திரும்பினர்.
இந்நிலையில் பிரித்தானியாவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைச்சர் ஹமிஷ் பால்கனர் தெரிவித்த தகவலில், கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகள் அடிப்படையில் பிரித்தானிய தம்பதி விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தம்பதி சிறையில் இருந்த போது இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக தலிபான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |