முதலிரவை சிறையில் செலவிட்ட பிரித்தானிய தம்பதியர்: எதனால் தெரியுமா?
ஸ்காட்லாந்தில், தங்கள் திருமணத்தன்று ஏற்பட்ட களேபரத்தில் மணமகள் தன் தாயைத் தாக்க, மணமகனும் மாப்பிள்ளைத் தோழனும் ஆளுக்கொருபக்கம் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களைத் தாக்க, மணமக்கள் தங்கள் முதலிரவை சிறையில் செலவிட நேர்ந்தது.
Uddingston என்ற நகரில் Claire (26) என்ற பெண்ணுக்கும் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது ஏதோ காரணத்துக்காக வாக்குவாதம் ஏற்பட, Claire தன் தாயான Cherry-Ann Lindsayயை தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் குத்தியிருக்கிறார். அவர் கீழே விழ, அவரை ஷூ காலால் மிதித்திருக்கிறார் Claire.
மணமகளுக்கு ஆதரவாக மணமகனான Eamonnம், மாப்பிளைத் தோழனும், Eamonnஇன் தம்பியுமான Kieranம் சண்டையில் கலந்துகொள்ள, இரண்டு பேருமாக திருமணத்துக்கு வந்த இரண்டு விருந்தினர்களை துவம்சம் பண்ணியிருகிறார்கள். மணமகன் Eamonn ஒரு குத்துச்சண்டை வீரர் வேறு!
ஆக, திருமண வீட்டில் ஒரே களேபரமாக, பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
பொலிஸ் விசாரணைக்குப் பின் Claire, Eamonn மற்றும் Kieran ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆக, மணமக்கள் முதலிரவை சிறையில், அதுவும் தனித்தனி அறைகளில் செலவிட நேர்ந்துள்ளதுதான் பரிதாபம்!