லொட்டரியில் 148 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானிய தம்பதி... அவர்களுடைய இன்றைய நிலைமை
பிரித்தானியாவில் வாழும் ஒரு தம்பதி, மிகப்பெரிய தொகை ஒன்றை லொட்டரியில் வென்றார்கள். அவ்வளவு பெரிய தொகையுடன் அவர்கள் எப்படியெல்லாமோ சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்களுடைய இன்றைய நிலைமை அப்படி இல்லை...
லொட்டரியில் மிகப்பெரிய தொகை வென்ற தம்பதி
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த கில்லியன் (51), ஆட்ரியன் பேஃபோர்ட் (Gillian, Adrian Bayford) தம்பதியருக்கு, 2012ஆம் ஆண்டு, லொட்டரியில் 148 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது. அதாவது, இலங்கை மதிப்பில் 58,52,87,08,733 ரூபாய்.
அவ்வளவு பெரிய தொகை வென்ற அந்த தம்பதி நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனால், லொட்டரி வென்ற 15ஆவது மாதமே இருவரும் விவாரத்து செய்து பிரிந்தார்கள். அந்த லொட்டரிச்சீட்டை வென்றது ஆட்ரியன் என்றாலும், அவர் அந்த தொகையில் சரி பாதியை மனைவிக்குக் கொடுத்துவிட்டார்.
Credit: PA:Press Association
இரண்டாவது திருமணம் செய்த பெண்
அதற்குப் பின், கில்லியன் இரண்டாவதாக பிரையன் (Brian Deans, 43) என்பவரை திருமணம் செய்துள்ளார். 2020ஆம் ஆண்டு தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
வேலை எதற்கும் செல்லாத பிரையன், தன் மனைவியின் பணத்தை செலவு செய்வதை மட்டுமே வாழ்க்கையில் லட்சியமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
Credit: The Sun
ஒரு குடும்பம் வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், கணவன் எத்தனை ஆயிரம் பவுண்டுகள் கேட்டாலும் மறுக்காமல் கொடுத்திருக்கிறார் கில்லியன். நினைத்த நேரத்தில் ஆசைப்பட்ட கார்களை வாங்குவது, கைக்கடிகாரங்கள் வாங்குவது, ஊர் சுற்றுவது, நண்பர்களை அழைத்துக்கொண்டு விளையாட்டுப் போட்டிகள் காணச் செல்வது என ஊதாரியாக அலைந்த பிரையன், அதற்காக செலவு செய்ததெல்லாம் தன் மனைவி கில்லியனின் பணம்.
Credit: Andrew Styczynski - The Sun
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கில்லியன், பிரையனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். ஆம், சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.
இதற்கிடையில், கில்லியனைப் பிரிந்த முதல் கணவரான ஆட்ரியனுக்கும் திருமண வாழ்க்கை எதுவும் சரியாக அமையவில்லை. ஆக, 148 மில்லியன் பவுண்டுகள் வென்றும், ஒரு பக்கம் கில்லியனும், மறுபக்கம் ஆட்ரியனும் தனித்தனியாக வாழ்ந்துவருகிறார்கள்.
Credit: Michael Schofield - The Sun Glasgow
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |