உக்ரைன் ஆயுதங்களுடன் பிரான்சில் சிக்கிய பிரித்தானிய தம்பதி: அவர்கள் சொன்ன காரணம்
பிரான்சில் கலேஸ் பகுதி சுங்க அதிகாரிகளின் சோதனையின் போது உக்ரைன் ஆயுதங்களுடன் பிரித்தானிய தம்பதி ஒன்று சிக்கியுள்ளது.
உக்ரைன் ஆயுதம்
தங்கள் வாகனத்தில் உக்ரைனில் இருந்து இரு ராக்கெட் லாஞ்சர்களை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்க, இறுதியில் பிரான்ஸ் சுங்க அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
@getty
Buster Bunkers எனப்படும் அந்த ஆயுதத்தை தொடர்புடைய பிரித்தானிய தம்பதி பத்திரமாக எடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், பிரித்தானியாவுக்கு நுழையும் முன்னர் கலேஸ் துறைமுகத்தில் வாடிக்கையான சோதனையின் போது அவர்கள் சிக்கியுள்ளனர்.
படகுக்கு அனுமதிக்கப்படும் முன்னர் சுங்க அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அந்த தம்பதி, உக்ரைன் ஆயுதம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனில் அந்த தம்பதி மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் அமெரிக்க தயாரிப்பான M141s துப்பாக்கியில் பயன்படுத்தும் 14 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
விதிகளுக்கு உட்பட்டு அபராதம்
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த ஆயுதங்களை செயலிழக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. மே 7ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் அந்த தம்பதி கைது செய்யப்பட்டதுடன், இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
@reuters
வெற்றியின் அடையாளமாக அந்த ஆயுதங்களை உக்ரைன் தரப்பு தங்களுக்கு பரிசளித்ததாக அந்த தம்பதி கூறியுள்ளனர். 4 நாட்கள் உக்ரைனில் செயல்பட்டதாகவும், அந்த ஆயுதங்களை எடுத்துவர அனுமதி இல்லை என்பதை தங்களிடம் எவரும் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுங்கத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |