ராஜினாமா செய்தார் பிரித்தானிய துணை பிரதமர்: பிரித்தானியாவில் பரபரப்பு
பிரித்தானிய துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் ராஜினாமா செய்துள்ள விடயம் பிரித்தானிய அரசியலில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
எதனால் ராஜினாமா?
பிரித்தானிய துணை பிரதமான டொமினிக் ராப் (Dominic Raab), இதற்கு முன் வகித்த மூன்று பதவிகளின்போது, தனக்குக் கீழே பணியாற்றிய 24 பணியாளர்களை தொந்தரவு செய்ததாக, அல்லது வம்புக்கிழுத்ததாக (bullying) புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
அவர்களில் 8 பேர் முறைப்படி ராப் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் ரிஷி அது குறித்து விசாரிப்பதற்காக மூத்த சட்டத்தரணியான Adam Tolley KC என்பவரை நியமித்தார்.
REUTERS
அதைத் தொடர்ந்து, தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ராப். ட்விட்டரில் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
ராபின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், அவர், நடத்தை காரணமாக பிரதமர் ரிஷியின் அமைச்சரவையிலிருந்து வெளியேறும் மூன்றாவது மூத்த அமைச்சராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
My resignation statement.? pic.twitter.com/DLjBfChlFq
— Dominic Raab (@DominicRaab) April 21, 2023