தவறான திருப்பத்தில் திரும்பிய பிரித்தானிய மருத்துவர் சுட்டுக் கொலை: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய மருத்துவர் அங்கு நடந்த வன்முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கலவரம்
தென்னாப்பிரிக்காவில் வாகனங்களை காவல்துறையினர் சிறைப்பிடிப்பது மற்றும் அதிகாரிகளின் கடுமையான தந்திரோபாய நடவடிக்கை ஆகியவற்றால் கோபமடைந்த மினி பஸ் டாக்ஸி டிரைவர்கள் கேப் டவுன் நகர சாலையில் இறங்கி வன்முறை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Sky News
பிரித்தானிய மருத்துவர் சுட்டுக் கொலை
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய மருத்துவர் உயிரிழந்த 5 பேரில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கேப் டவுன் நகரின் ந்தலங்கானோ பகுதியில் வைத்து (Ntlangano Crescent area) வியாழக்கிழமை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தவறான திருப்பத்தில் திரும்பிய போது அவரை சூழ்ந்து கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இருப்பது தெரியவந்துள்ளது.
Sky News
இதற்கிடையில் பிரித்தானிய தூதரகம் வழங்கிய தகவலில், உயிரிழந்த பிரித்தானிய மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய ஆறுதல் வழங்கி வருவதாகவும், தென் ஆப்பிரிக்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |