ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்: உயிருக்கு போராடும் நோயாளிகள்!
பிரித்தானியாவில் மருத்துவர்கள் நடத்தும் நான்கு நாள் வேலைநிறுத்தத்தின் போது, நோயாளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவர்களின் போராட்டம்
பிரித்தானியாவில் மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டி கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியத்தில் 35% உயர்த்தி தர வேண்டும் என இப்போராட்டம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
@george crakewell
இதனை தொடர்ந்து அடுத்த வாரம் திங்கள் கிழமை முதல் தொடர்ந்து 72 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
@bma
பிரித்தானியாவின் பணவீக்கத்தை ஈடு செய்ய முடியா நிலை உள்ள போது, மருத்துவர்களின் 35% ஊதிய உயர்வு பற்றி ஆலோசிப்பதாக அரசு கூறியிருந்தது. தற்சமயம் அரசாங்கம் இந்தக் கோரிக்கையை உண்மையற்றது என்று கூறியுள்ளது.
உயிருக்கு போராடும் நோயாளிகள்
மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் நோயாளிகள் பாதிக்கப்படலாம் என லண்டனிலுள்ள கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் NHS அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளது.
@bbc
மற்ற மருத்துவமனை நிறுவனங்களும், மருத்துவர்களின் வெளிநடப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இது அவசர மற்றும் திட்டமிடப்பட்ட மர்த்துவ சிகிச்சைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எந்த சேவைகளுக்கும் விலக்கு அளிக்க மறுத்துவிட்டது, ஆனால் நோயாளிகளைப் பாதுகாக்கும் திட்டங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
@pa
கைஸ் மற்றும் செயின்ட் தாமஸில் உள்ள மூத்த நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் டாக்டர் சாரா ஹன்னா
"அடுத்த வாரத்தைப் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். குறிப்பாக எங்கள் ரோட்டாக்களை பணியமர்த்தும் திறனைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். எங்களிடம் போதுமான மருத்துவர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதனை உறுதியாக சொல்ல முடியாது.” என கூறியுள்ளார்.
”அறக்கட்டளை அதன் மூத்த மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்தியதால் திட்டமிடப்பட்ட அனைத்து சிகிச்சைகளிலும் பாதி வரை ரத்து செய்யப்படலாம்” என்று டாக்டர் ஹன்னா, தெரிவித்துள்ளார்.