உக்ரைனில் உள்ள பிரித்தானிய தூதரகம் குறித்து முக்கிய தகவல்!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய சர்வதேச கவலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உக்ரைனில் உள்ள பிரித்தானிய தூதரகம் "தற்காலிகமாக" இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனை சுற்றி உறைந்தது 150,000 ரஷ்ய துருப்புக்கள் எல்லையில் நிலைகொண்டிருப்பதாக அறிக்கைகள் வெளியான நிலையில், இன்னும் சில நாட்களிலேயே உக்ரைன் மீதான படையெடுப்பு சாத்தியம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தாக்குதல் உறுதியானால் ரஷ்யா உக்ரேனை எளிதில் ஆக்கிரமித்துவிடலாம் என்று சர்வதேச அளவில் கவலை அதிகரித்துவருகிறது. இதனிடையே, உக்ரைனில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன.
இராஜதந்திர சுமுக பேச்சுவார்த்தைக்கு தாயார் எனும் படைகளை உக்ரைன் எல்லைகளிலிருந்து இராணுவ தலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக அறிவித்தபோதும், அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும், அதற்கு நேர்மாறாக ரஷ்யா அதன் படைகளை 200,000-ஆக கூட்டிவருவதாகவும் மேற்கத்திய உளவாளிகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானிய தூதரகமும் தற்காலிகமான இடமாற்றத்தை அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் Kyiv-ல் இருந்து மேற்கே உள்ள Lviv நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) தெரிவித்துள்ளது.
மேலும், பிரித்தானியர்கள் உக்ரைனுக்கும், பெலாரஸுக்கும், உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாவிற்குள் அங்கீகரிக்கப்படாத பிரிந்த மாநிலமான டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்கும் (ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளிகள்) அத்தியாவசியப் பயணத்தை மட்டும் மேற்கொள்ளுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்துகிறது.
அதேபோல், உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் வணிக வழிகள் இன்னும் இயக்கத்தில் இருக்கும் போதே அங்கிருந்து வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறார்கள்.
#Ukraine Temporary relocation of British Embassy and updated travel information (‘Summary’ and ‘Returning to the UK’ pages). https://t.co/BnntcqOyc9 pic.twitter.com/qi1YrvMlr9
— FCDO Travel Advice (@FCDOtravelGovUK) February 18, 2022