தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய பிரித்தானியர்கள்: தொடர்ந்து தேடும் சுவிஸ் நிர்வாகம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து விடுபட்டதாக கருதப்படும் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மண்டலத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா கிராமத்தில் இருந்து இரவோடு இரவாக 200 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல்களில் இருந்து ரகசியமாக வெளியேறியுள்ளனர்.
சுவிஸ் நிர்வாகத்திடம் இவர்கள் சிக்கினால், கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக 10,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 20 அன்று சுவிஸ் நிர்வாகம் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி மறுத்தது.
உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க கொரோனாவால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மட்டுமின்றி, டிசம்பர் 14 முதல் அனைத்து பயணிகளும், சுவிஸில் வந்த நாளிலிருந்து பத்து நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவினை சுவிஸ் அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வலாய்ஸ் மண்டலத்தில் மட்டும் தற்போது 86 பிரித்தானிய பயணிகளும் 13 தென்னாப்பிரிக்க பயணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால், மேலும் 269 சுற்றுலாப்பயணிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் வலாய்ஸ் மண்டலத்தில் இருப்பது உறுதி, ஆனால் அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்பது தொடர்பில் தகவல் இல்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் சுவிட்சர்லாந்தில் 7 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியு