திருமணம் முடிந்த அடுத்தநாள் பிரித்தானியருக்கு கூரையை பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்! கண்ணீர் விட்ட மனைவி
துபாயில் வசிக்கும் பிரித்தானிய இளைஞர் ஒருவர் திருமணமான அடுத்தநாளே மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
26 வயதான ரீஸ் என்ற இளைஞர் பிரித்தானியாவை சேர்ந்தவர் ஆவார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு குடிபெயர்ந்த நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பிரித்தானிய காதலியை ரீஸ் திருமணம் செய்து கொண்டார். அவரை மணந்த அதிர்ஷ்டமோ என்னவோ திருமணம் முடிந்த அடுத்தநாள் மிகப்பெரிய கோடீஸ்வரராக ரீஸ் மாறியுள்ளார். ஆம்! துபாய் Mahzooz டிராவில் அவருக்கு Dh10 மில்லியன் (கிட்டத்தப்பட்ட ரூ. 98 கோடி) பரிசு விழுந்துள்ளது.
Supplied
ரீஸ் கூறுகையில், திருமணத்தில் இருந்து வந்த உடனே அடுத்தநாள் இந்த ஆச்சரியம் நடந்துள்ளது. நான் வெற்றி பெற்றதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை பார்த்த பிறகு ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய்விட்டேன்.
பின்னர் ஓடி போய் என் மனைவியிடம் விடயத்தை சொன்னவுடன் அவள் மகிழ்ச்சியில் அழ தொடங்கிவிட்டாள். அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை, எங்கள் பெற்றோரிடமும் இந்த வெற்றி குறித்து கூறினோம்.
நாங்கள் தொடர்ந்து துபாயில் வாழ்வோம். இங்கேயும் பிரித்தானியாவிலும் ஒரு இடத்தை சொந்தமாக வாங்கவுள்ளோம். மேலும் எனது மனைவிக்கு புத்தம் புதிய காரை பரிசளிப்பேன். உடற்பயிற்சி கூடத்தில் தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.
இதனிடையில் Mahzooz டிராவில் Dh10 மில்லியன் பரிசை இதுவரை வென்றவர்களில் ரீஸ் தான் வயதில் குறைவானவர் என தெரியவந்துள்ளது.
Supplied