14 வயது கர்ப்பிணிப்பெண்ணின் கல்லறையை இடம் மாற்றிய பிரித்தானியக் குடும்பம்: தொடர்ந்த அமானுஷ்யங்கள்...
வேல்ஸ் நாட்டிலுள்ள வீடு ஒன்றிற்கு குடிவந்த ஒரு குடும்பம், அங்கிருந்த கல்லறை ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை வேறொரு இடத்துக்கு மாற்றியுள்ளது. அப்போதிருந்து அந்த வீட்டில் அமானுஷ்யங்கள் தொடர்ந்துள்ளன.
கல்லறையை இடம் மாற்றிய பிரித்தானியக் குடும்பம்
வேல்ஸ் நாட்டிலுள்ள Penyffordd என்னும் கிராமத்திலுள்ள வீடு ஒன்றிற்கு Rose-Mary Gower என்னும் பெண்ணின் குடும்பம் குடிவந்துள்ளது.
தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்ததால், வழியருகே அமைந்திருந்த கல்லறை ஒன்றில் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை அகற்றி வேறொரு இடத்தில் பதித்துள்ளனர்.
அந்தக் கல்லறை, Jane Jones என்னும் 15 வயது பெண்ணுடையது. 14 வயதிலேயே கர்ப்பமுற்று, பிரசவத்தின்போது உயிரிழந்ததால், அவளுக்கு இடுகாட்டில் இடம் கொடுக்கப்படாது என்பதால், அவளை வீட்டின் அருகேயே புதைத்துள்ளனர் அவளது உறவினர்கள்.
அவளது கல்லறையின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லைத்தான் Rose Mary குடும்பம் அகற்றியுள்ளது.
துவங்கிய அமானுஷ்யம்
அந்தக் கல்லறை அகற்றப்பட்ட நாள் முதலே, Rose Mary வீட்டில் அமானுஷ்ய விடயங்கள் நடக்கத் துவங்கியுள்ளன. ஒன்று இரண்டல்ல, சுமார் 300 அமானுஷ்ய சம்பவங்கள் அந்த வீட்டில் நடந்துள்ளன.
பிபிசியின் Sian Eleri என்னும் செய்தியாளர், இந்த விடயங்கள் குறித்து விசாரிக்க அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரிடம் Rose Mary நடந்த பல அமானுஷ்யங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
BBC | TWENTY TWENTY | RORY JACKSON
ஒருநாள், Rose Mary, வீட்டிலிருந்த காய்ந்து போன பூங்கொத்து ஒன்றை வெளியே எறியச் செல்லும்போது, அந்தப் பூங்கொத்திலுள்ள இதழ்கள் சில வீட்டுக்குள் சிதறியுள்ளன.
அப்போது யரோ ஒருவர் கதவைத் தட்ட, எழுந்து சென்ற Rose Mary, மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது, அந்த பூ இதழ்கள் மாயமாகி, அந்த இடத்தில் இறந்த குளவிகள் கிடப்பதைக் கண்டுள்ளார், விடயம் என்னவென்றால், அந்த வீட்டின் அருகே எங்கும் குளவிக்கூடுகளே இல்லை!
ஒருநாள், திடீரென வீட்டுச் சுவர் ஒன்றில், வேல்ஸ் மொழியில், அமைதி என எழுதப்பட்ட எழுத்துக்கள் தோன்றியுள்ளதைக் கவனித்துள்ளது Rose Mary குடும்பம்.
BBC | TWENTY TWENTY | RORY JACKSON
மற்றொரு நாள் இரவு, தூக்கத்திலிருந்து விழித்த Rose Mary, தன் மகள் படுத்திருக்கும் கட்டிலினருகே ஒரு துறவி நிற்பதைக் கண்டிருக்கிறார். அதேபோல ஒருமுறை, அவரது மகள் அந்தத் துறவியைக் கண்டு பயந்து அலறியிருக்கிறாள்.
இப்படியே தினமும் ஒரு அமானுஷ்ய சம்பவம் நிகழ, ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்துவிட்டு புறப்பட்டுவிட்டார்கள் Rose Mary குடும்பத்தினர்.
அதற்குப் பின் அவர்கள் எந்த அமானுஷ்ய விடயங்களையும் சந்திக்கவில்லையாம். இதற்கிடையில், ஹாலிவுட்டைச் சேர்ந்த சிலர் அந்த வீட்டில் நிகழும் விடயங்களை திரைப்படமாக எடுக்க அனுமதி கோரியுள்ளார்கள்.
ஆனால், அவர்கள் கற்பனைக் கதை ஒன்றை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டதை அறிந்த Rose Mary குடும்பத்தினர், இந்த வீட்டில் இவ்வளவு விடயங்கள் உண்மையாக நடக்கும்போது, அதைச் சொல்லாமல், கற்பனைக் கதை ஒன்றைச் சொல்ல அவர்கள் திட்டமிட்டதால், அவர்களை துரத்திவிட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது அந்த வீட்டில்!!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |