பிரான்சில் மர்ம நபரால் சுடப்பட்ட பிரித்தானிய குடும்பம்: பல ஆண்டுகளுக்குப் பின் நம்பிக்கையை உருவாகியுள்ள விடயம்
பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானியக் குடும்பம் ஒன்று சென்ற காரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அந்தக் காரிலிருந்த மூன்று பேர் உயிரிழந்தார்கள். தற்போது பொலிசார் துவங்கியுள்ள ஒரு நடவடிக்கை, இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோரும், அவ்வழியே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Sylvian Mollier (45) என்ற பிரான்ஸ் நாட்டவரும் உயிரிழந்தனர்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்துகொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை பைலட்டான Brett Martin என்பவர், கார் ஒன்றின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருக்க, காருக்கு முன், சற்று முன் தன்னை தாண்டி சைக்கிளில் வந்த Sylvian Mollier இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு, சைக்கிளை விட்டு விட்டு அருகில் சென்று பார்த்துள்ளார்.
காருக்குள் பார்க்கும்போது, சாரதியின் இருக்கையில் Saad இறந்து கிடப்பதையும், காரின் பின் இருக்கையில் அவரது மனைவி Iqbal, தாயார் Suhailaவும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் கண்டுள்ளார்.
அவர் காரை நோக்கி செல்லும்போது, காருக்கு பின்னாலிருந்து Zainab (7) என்ற குழந்தை அவரைக் கண்டதும் அவரை நோக்கி நடந்து வந்திருக்கிறாள், ஆனால், அவருக்கு அருகில் வருவதற்குள் அவள் மயங்கி தரையில் சாய்ந்துவிட்டாள்.
Credit: Doug Seeburg - The Sun
இரவு 11 மணி ஆகும்போது, அதே பகுதியில் Saad al-Hilli குடும்பத்தினருக்கு சற்று தொலைவில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த ஒரு குடும்பம், Saad குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்ததை தாங்கள் பார்த்ததாக சொல்ல, உடனே பொலிசார் ஹெலிகொப்டர் உதவியுடன் அப்பகுதியில் தேடியும் யாரையும் காணவில்லை.
நள்ளிரவில், அதாவது மறு நாள் ஆன பிறகு தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, Iqbalஇன் உடலை அகற்ற, அவர்கள் கண்ட காட்சி அதிரவைத்திருக்கிறது. தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருந்திருக்கிறாள். அவ்வளவு நேரமும் அவள் தன் இறந்த தாயின் கால்களுக்கிடையே இருந்ததை யாருமே கவனிக்கவில்லை!
Credit: AFP
பல ஆண்டுகளுக்குப் பின் நம்பிக்கையை உருவாகியுள்ள விடயம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், இன்று வரை குற்றவாளி சிக்கவில்லை. இந்நிலையில், தற்போது DNA சோதனைகள் பல முன்னேற்றங்களை ஏற்படுத்திவரும் நிலையில், குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் கொல்லப்பட்டவர்களில் சிலரது உடைகளில் குற்றவாளியின் DNA கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, மீண்டும் அவை DNA சோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. அவற்றில் குற்றவாளியின் DNA கிடைக்குமானால், அதை வைத்து குற்றவாளியைக் கண்டு பிடிக்க ஒரு பெரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவே, அநியாயமாக பலியான உயிர்களுக்கு நீதி கிடைக்க மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளதால், வழக்கில் பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உருவாகியுள்ளது.
Credit: PA:Press Association
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |