வெளிநாடு ஒன்றில் உணவு உண்ட பிரித்தானிய தந்தையும் மகனும் மரணம்: உணவில் விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்...
பங்களாதேஷ் நாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்களான ஒரு தந்தையும் மகனும் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுடைய உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றுள்ளனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, வழியிலேயே, Rafiqul Islam மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளார்கள்.
Image - pagegoo
Rafiqulஉடைய மனைவியான Husnara (45), தம்பதியரின் பிள்ளைகளான Samira (20) மற்றும் Sadiqul (24) ஆகியோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், Husnara மற்றும் Samira ஆகிய இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், Sadiqulஇன் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் Rafiqul குடும்பத்தினர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
dailymail