மகளின் நினைவாக எவரெஸ்ட் சிகரம் ஏறிய பிரித்தானியர்... கொல்லும் பனிப்புயலில் சிக்கிய திக் திக் தருணம்
மறைந்த தனது மகளின் நினைவாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிரித்தானியர், கொல்லும் பனிப்புயலில் சிக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக
பிரித்தானியரான ராப் மேசன் என்பவர் தனது மகள் கெசியாவின் நினைவாக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டும் முயற்சியின் ஒருபகுதியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.
ஆனால் தங்கள் பயணத்தின் கடைசி நாளில் எதிர்பாராத பனிப்புயலில் சிக்கி அவரது குழுவினர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளதாக ராப் மேசன் தெரிவித்துள்ளார். வார இறுதியில் மலையேறுபவர்கள் திபெத்திய மலைப் பகுதியில் கடுமையான வானிலையை எதிர்கொண்டனர்.
பனிப்புயல் அவர்களின் முகாம்களை அடர்ந்த பனியில் புதைத்துள்ளது. இதனால், கடும் போராட்டத்திற்கு பிறகு பலர் மீண்டுள்ளனர். இதில் ஒருவர் மீண்டு வர முடியாமல் பனிக்குள் புதைந்து மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில், ஜெர்சியைச் சேர்ந்த மேசன், தான் பயணப்பட்ட பாதையின் சில பகுதிகள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறினார், தான் எதிர்கொண்ட அனுபவம் மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மிக மோசமாக
பனிப்பொழிவு 12 முதல் 14 மணி நேரத்தில் நான்கு அங்குலமாக இருந்தது என்றும், இது இந்த வருடத்தில் அசாதாரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ராப் மேசன் மற்றும் குழுவினர் முன்னெடுத்த இந்த பயணமானது ஜெர்சி பகுதியில் உளவியல் சிக்கலில் இருக்கும் இளம் வயதினருக்காக நிதி திரட்டும் முயற்சி என்றே கூறுகின்றனர்.
கடந்த 2022ல் மேசனின் 14 வயது மகள் திடீரென்று உயிரை மாய்த்துக் கொண்டார். நேபாளத்தின் லுக்லாவை விட்டு வெளியேற தனது குழுவினர் காத்திருந்தபோது, மலையேற்றத்தின் உயரத்தில் பனிப்புயலில் சிக்கிய ஒருவரின் உடலைக் கண்டெடுத்தது தனக்கு மிகவும் வேதனையான தருணங்களில் ஒன்று என்று மேசன் தெரிவித்துள்ளார்.
பனிப்புயலின் போது மக்களின் கூடாரங்கள் நசுக்கப்பட்டதாகவும், சில மலை ஏறுபவர்கள் உறைபனி நிலைமைகள் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டதாகவும் மேசன் தெரிவித்துள்ளார்.
கொல்லும் பனிப்புயலை அடுத்து திபெத்தின் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு சரிவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேசனின் ஏழு நண்பர்கள் குழு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதன் மூலமாக 20,000 பவுண்டுகள் திரட்டியுள்ளதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |