அரைக்கம்பத்தில் பறந்த பிரித்தானிய கொடி... இளவரசி கேட்டுடன் தொடர்பு படுத்தி இணையத்தில் பரவிய மோசமான செய்தி
நேற்றைய தினம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு அனுசரிக்கப்பட்ட நிலையில், இளவரசி கேட் பங்கேற்று கௌரவிக்கப்படவேண்டிய அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் ஒரு புகைப்படமும், அதனுடன் இளவரசி கேட்டை தொடர்பு படுத்தும் ஒரு செய்தியும் சமூக ஊடகம் ஒன்றில் வேகமாகப் பரவத்துவங்கின.
முக்கிய நிகழ்வு
வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் மன்னரானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுக்கு வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆகவே, இளவரசி கேட், வேல்ஸ் இளவரசி ஆகிறார்.
அத்துடன், இளவரசி கேட், Irish Guards என்னும் பாதுகாவலர்களின் Colonel of the regiment என்னும் பொறுப்பையும் வகிக்கிறார். நேற்று, அதாவது, மார்ச் மாதம் 17ஆம் திகதி, St Patrick's Day தினத்தையொட்டி. இந்த பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடந்தது. அதில் இளவரசி கேட் கலந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால், அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர் இல்லாத நிலையிலும், வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
In keeping with tradition wherever they are in the world the @irish_guards give a rousing three cheers for the Colonel of the Regiment HRH the Princess of Wales at their St Patrick’s Day Parade in Aldershot. @BritishArmy @KensingtonRoyal pic.twitter.com/uXEtqjcikM
— The Army in London (@ArmyInLondon) March 17, 2024
அரைக்கம்பத்தில் பறந்த கொடி
இந்நிலையில், பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் காட்சிகள் சமூக ஊடகமான எக்ஸில் பரவத்துவங்கின.
St Patrick's Day தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், இன்னொரு பக்கம் இளவரசி கேட் இறந்துவிட்டதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.
??? Reports of Flags flying at half mast in Britain……… ? pic.twitter.com/ssa0UNfGBA
— Concerned Citizen (@BGatesIsaPyscho) March 17, 2024
சிலர் இந்த இரண்டு விடயங்களையும் இணைத்து, இளவரசி கேட் இறந்துவிட்டார், அதற்காகத்தான் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்திகளைப் பகிரத் துவங்கினர்.
? BREAKING: Reports that the Union Flag is flying at half-mast at some Government Buildings across the United Kingdom tonight amid reports the BBC is on standby for an "imminent announcement" from the Royal Family.
— Cillian (@CilComLFC) March 17, 2024
Is this related to Kate Middleton’s condition? ? pic.twitter.com/MoeHk5w5Fs
பின்னர், எக்ஸின் Fact check குழுவினர் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி குறித்த உண்மையை ஆராய்ந்தபோது, அது மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.