பலேர்மோ கடலில் கவிழ்ந்த பிரிட்டிஷ் படகு: இலங்கையர், பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள் பரிதவிப்பு

Thiru
in ஐக்கிய இராச்சியம்Report this article
பெருமளவு பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு கடற்பகுதியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கி இருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
படகு விபத்து
பெரும்பாலான பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள Sicily தீவிக்கு அருகே உள்ள பலேர்மோ கடற்பகுதியில் சூறாவளியில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு நடந்த இந்த விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார், 6 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
பிரித்தானிய கொடியுடன் பயணித்த இந்த படகில், பிரித்தானிய குடிமக்களை தவிர்த்து நியூசிலாந்து, இலங்கை மற்றும் இரண்டு பிரான்ஸ் மற்றும் ஐரிஷ் குடிமக்கள் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
16 பேர் வரை மீட்பு
இந்த சூப்பர் படகு விபத்தில் சிக்கிய சோஃபி(Sophie) என்ற 1 வயது பிரித்தானிய குழந்தை உட்பட 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 1 வயது சிறுமி உட்பட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |