புடின் போரில் வென்றால்... மேற்கத்திய நாடுகளுக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலரின் வலியுறுத்தல்
போரில் புடின் வெற்றி பெற்றால், மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர், ஆகவே, உக்ரைனுக்கு உதவவேண்டும் என மேற்கத்திய நாடுகளை வலியுறுத்த உள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தால் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கையையும் மீறி, பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவி செய்யவேண்டும் என மேற்கத்திய நாடுகளை வலியுறுத்த உள்ளார்.
இன்று மாலை உக்ரைன் ரஷ்ய பிரச்சினை தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்ற இருக்கும் Liz Truss, மேற்கத்திய நாடுகளுக்கு முக்கிய கோரிக்கைகள் வைக்க இருக்கிறார்.
உக்ரைன் போரில் புடின் வெற்றிபெற்றால், ஐரோப்பா முழுவதும் சொல்லொணா துயரமும், உலகம் முழுவதும் பயங்கர விளைவுகளும் ஏற்படும் என்று கூறியுள்ள Liz Truss, பிறகு நாம் மீண்டும் பாதுகாப்பாக உணரவே முடியாது என்று கூற இருக்கிறார்.
ஆகவே, உக்ரைனுக்கான உதவிகளை இரட்டிப்பாக்கவேண்டும் என்று கூற இருக்கும் அவர், கனரக ஆயுதங்கள், tankகள், ஆகாயவிமானங்கள் என அனைத்து உதவிகளையும் நாம் உக்ரைனுக்கு வழங்கவேண்டும் என கூற இருக்கிறார்.
மூன்று இடங்களில் நமது உதவி இருக்கவேண்டும் என்று கூற இருக்கும் அவர், அவை, இராணுவ பலம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஆழ்ந்த உலக கூட்டாளிகளின் உதவி என்று கூற உள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் விதத்தில் பொருளாதாரத் தடைகள் விதிப்பதோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்றும் கூற உள்ளார்.
புடின் தனது போருக்கு நிதியுதவி பெற எந்த நாடும் இருக்கக்கூடாது என்றும் கூற உள்ளார் Liz Truss.