ரஷ்ய தூதரைத் திட்டித் துரத்திய பிரித்தானிய வெளியுறவுச் செயலர்: வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்
பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதருக்கு சம்மன் அளித்த பிரித்தானிய வெளியுறவுச் செயலர், அவர் கூட்டத்தில் எரிச்சலூட்டும் வகையில் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்ததால், அவரை திட்டித் துரத்தியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசுவதற்காக பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதரான Andrei Kelinக்கு சம்மன் அளித்துள்ளார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss.
அதைத் தொடர்ந்து Kelin நேரில் ஆஜராக, அவரிடம், தொடர்ந்து ரஷ்யா உக்ரைனை ஊடுருவும் திட்டம் எதுவும் இல்லை என பொய் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, திடீரென ஊடுருவியதால், அது கீழ்த்தரமான நாடு என உலக அரங்கில் தன்னை நிரூபித்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது அப்பட்டமான சர்வதேச விதி மீறல் என்று கூறியுள்ள Liz Truss, ஆகவே, ரஷ்யா பதிலுக்கு கடுமையான தடைகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும், அது ரஷ்ய பொருளாதாரத்துக்கும் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கும் கடுமையான வேதனையை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
காரசாரமாக கூட்டத்தில் Liz Truss ரஷ்யாவை விமர்சிக்க, ரஷ்ய தூதரான Kelinனோ, மீண்டும் மீண்டும் ரஷ்யாவின் அர்த்தமற்ற கொள்கைகள் குறித்த விடயங்களையே மனப்பாடம் செய்வது போல ஒப்பித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
ஆகவே, கடுமையான எரிச்சலடைந்த Liz Truss, Kelinஐ கடுமையாக திட்டி கூட்டத்திலிருந்து துரத்திவிட்டதாக வெளியுறவு அமைச்சக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.