மீண்டும் உக்ரைனை தாக்க புடின் திட்டம்? பிரித்தானிய வெளியுறவுச் செயலர் எச்சரிக்கை
மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்ய படைகளை திரட்டுவதற்கு போதுமான நேரம் கிடைப்பதற்காக, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது போல் காட்டி உலகின் கவனத்தை திசை திருப்ப புடின் முயற்சி செய்யலாம் என எச்சரித்துள்ளார், பிரித்தானிய வெளியுறவுச் செயலர்.
பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss, புடினுடைய அமைதிப் பேச்சுவார்த்தைகள், ரஷ்யா மீண்டும் படை திரட்டுவதற்காக செய்யப்படும் திட்டமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு பக்கம் அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்துவது போல் காட்டிக்கொண்டு, அந்த நேரத்தைப் பயன்படுத்தி படைகளைத் திரட்டுவது புடினுடைய திட்டமாக இருக்கலாம் என்கிறார் அவர்.
ரஷ்ய தரப்பு சீரியஸாக அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்த விரும்பும் என்றால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் அதே நாளில் பொதுமக்கள் மீது குண்டுவீசாது என்கிறார் அவர்.
ஆகவே, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்கு பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் Liz Truss, ரஷ்ய படைகள் ஒன்று திரள நேரம் கிடைப்பதற்கான முயற்சிதான் இது என்கிறார்.
ஏனென்றால், உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் விலக்கிக்கொள்ளப்படவோ, அல்லது அது குறித்து சீரியஸான விடயங்கள் எதுவும் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படவோ இல்லை என்கிறார் அவர்.
ரஷ்யர்கள் பொய் மேல் பொய்யாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறும் Liz Truss, ஆகவேதான், மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்ய படைகளை திரட்டும் புடின், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது உலகின் கவனத்தை திசை திருப்பவாக இருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.