பிரான்ஸில் £163,000 பண நோட்டுகளுடன் சிக்கிய 76 வயது பிரித்தானியர்! நீதிமன்றத்தில் மேல்முறையீடு
பிரான்ஸில் £163,000 பண நோட்டுகளை வேனில் எடுத்துச் சென்ற 76 வயது பிரித்தானிய முதியவர் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
பண நோட்டுகளுடன் பிடிபட்ட பிரித்தானிய முதியவர்
பிரான்ஸ் பொலிஸார், படகு மூலம் பிரித்தானியாவுக்கு திரும்பி செல்ல முயன்ற 76 வயது பிரித்தானிய முதியவரின் வேனில் இருந்து £163,000 (ரூ.1.5 கோடி சுமார்) மதிப்பிலான பணத்தை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, பெயர் வெளியிடப்படாத அவர் மீது பணம் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் 16 மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனையுடன் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சுற்றி வளைத்த பிரான்ஸ் அதிகாரிகள்
2019ம் ஆண்டு சம்பந்தப்பட்ட முதியவர் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு மரச்சாமான்கள் மற்றும் சில மூட்டைகளுடன் வேன் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது பதற்றத்தில் அவரது வேனின் திசைமாற்றி-யில்(steering) தவறுதலாக எதையோ செய்துள்ளார், அப்போது பண நோட்டுகள் அடங்கிய மூட்டை ஒன்று வேனில் இருந்து கீழே விழுந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த 76 வயது பிரித்தானிய முதியவர், தனக்கு இந்த வேலையை குடுத்த பெண்மணியை எதிர்கொள்வதற்காக படகு மூலம் உடனடியாக பிரித்தானியாவுக்கு திரும்ப முயன்றுள்ளார்.
ஆனால் அவரை சுற்றி வளைத்த பிரான்ஸ் அதிகாரிகள், வேனை சோதனையிட்டு 7 பண மூட்டைகள் அடங்கிய பைகளை கைப்பற்றினர்.
Shutterstock
பண நோட்டுகள் இருப்பது தெரியாது!
தனக்கு மூட்டைகளில் பண நோட்டுகள் இருப்பது தெரியாது என்றும், இது போன்ற ஒரு பயணத்திற்கு தனக்கு £2,000 முதல் £4,000 வரை ஊதியம் கிடைக்கும் என்றும் முதியவர் பிரான்ஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 76 வயது பிரித்தானிய முதியவர் பண மோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
British man arrested France cash
large cash haul ferry UK
£163,000 France customs
French money laundering laws
Briton appeals prison sentence France