சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் ஆயுத கிடங்கு: குறிவைத்து அழித்த பிரித்தானியா-பிரான்ஸ் படைகள்
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடங்களை குறிவைத்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பின் ஆயுத கிடங்கு
சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள பால்மைரா நகருக்கு வடக்கு உள்ள மலைப்பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் சுரங்கங்கள் அமைத்து பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடங்களை கண்டறிந்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு இராணுவ படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பிரித்தானிய ராணுவம் தைபூன் FGR4 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசாங்கம் எந்தவொரு உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டே சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அவ்வப்போது ஐ.எஸ் அமைப்பின் சிலிப்பர் செல்கள் சிரியா மற்றும் ஈராக்கில் அடிக்கடி மோசமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |