பிரித்தானிய எரிபொருள் பிரச்சினை... இன்று களமிறங்கும் இராணுவம்: வெளியாகியுள்ள புகைப்படங்கள்
பிரித்தானிய எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில், இன்றுமுதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க உள்ளார்கள்.
அதற்காக அவர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் ட்ரக்குகளின் பாகங்கள் என்னென்ன, அவற்றை எப்படி பயன்படுத்துவது என துல்லியமாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் இன்று முதல் களமிறங்கி எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க உள்ளார்கள்.
இதற்கிடையில், லண்டன் மற்றும் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிபயங்கரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான Brian Madderson கூறும்போது, நாட்டின் மத்தியப்பகுதி, வடக்குப்பகுதி மற்றும் ஸ்காட்லாந்தில் நிலைமை பரவாயில்லை, ஆனால், லண்டன் மற்றும் நாட்டின் தென்கிழக்கு பகுதிகள் மிகவும் பயங்கரமாக உள்ளன என்றார்.