தந்தையுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற பதின்ம வயது பிரித்தானியப் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
தன் தந்தையுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற பதின்ம வயதுப் பெண் ஒருவர் பயங்கர முடிவை சந்தித்தார்.
பனிச்சறுக்கு விளையாட்டின்போது நிகழ்ந்த பயங்கரம்
பிரித்தானியர் ஒருவரும், அவரது 13 வயது மகளும் சுவிட்சர்லாந்திலுள்ள Graubunden மாகாணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அந்தப் பெண் பள்ளம் ஒன்றில் விழுந்திருக்கிறாள். அவள் விழுந்தபோது, அவளுடைய தலை பாறை ஒன்றில் மோத, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாள் அவள்.
worldradio
திங்கட்கிழமை மாலை இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தும், அவளை அவர்களால் காப்பாற்றமுடியவில்லை.
மகளை இழந்து அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு மன நல ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கிவருகிறார்கள்.